தனது மகளைக் காதல் செய்வதைக் கைவிட வேண்டும் என மகளின்தந்தை ஒருவர் காதலனின் தந்தையைக் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ள சம்பவம்திருச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பார்த்திபன் என்பவரது மகன் அப்பகுதியில் உள்ள ஒரு பெண்ணைக் காதலித்து வந்துள்ளார்.இந்நிலையில், அப்பெண்ணின் தந்தையான குமார்,பார்த்திபனின் மகன் தனது மகளைக் காதலிப்பதைக் கைவிட வேண்டும் எனக் கூறி சண்டையிட்டு வந்துள்ளார். இந்நிலையில் நடைபெற்ற வாக்குவாதத்தில் குமார், பார்த்திபனை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.