ADVERTISEMENT

2 வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் சிக்கித் தவிப்பு; மீட்பு பணி தீவிரம்!

06:53 PM Oct 25, 2019 | kalaimohan

திருச்சி மனப்பாறையை அடுத்த நடுகாட்டுப்பட்டியில் இரண்டு வயது குழந்தையான சுஜித் வீட்டின் அருகே 30 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உள்ள நிலையில் தற்போது ஆழ்துளை கிணற்றில் சிக்கிக்கொண்டிருக்கும் குழந்தையை மீட்கும் பணியில் பொதுமக்கள் உதவியுடன் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவிவருகியது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் தற்போது அந்த குழந்தை ஆழ்துளை கிணற்றில் சிக்கித் தவிக்கின்ற வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. இரவு நேரமாகிவிட்டதால் வெளிச்ச பற்றாக்குறையைபோக்க விளக்குகள் பொருத்தும் பணியும் ஒருபுறம் நடந்து வருகிறது. ஆழ்துளை கிணற்றுக்கு பக்கவாட்டில் ஜேசிபி இயந்திரத்தின் மூலம் குழிதோண்டி குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை 26 அடியில் உட்கார்ந்த நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவாசிக்க போதுமான ஆக்ஸிஜன் இருப்பதால் குழந்தைகள் நன்றக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தையை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார். அதேபோல் அந்த ஆழ்துளைக்கிணறு வைத்துள்ள தனியார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT