திண்டிவனம் அடுத்த நல்லாளம் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி-துர்கா தேவி இவர்களின் குழந்தை கவிதாஸ்ரீ(10) இவர் திண்டிவனத்தில் உள்ள ஆரம்பபள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

Advertisment

கடந்த 3 ஆம் தேதி காலையில் வீட்டின் அருகே உள்ள மளிகை கடைக்கு கருவேப்பிலை வாங்கிவர சென்றுள்ளார். சென்றவர் பல மணி நேரமாகியும் வீட்டிற்கு வராததால் பெற்றோர்கள் கடைக்கு தேடிச் சென்றனர். கடையில் கேட்டபோது கருவேப்பிலை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு சென்றுவிட்டார் என தெரிவித்தனர். இதையடுத்து பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

Advertisment

incident in thindivanam

ஆகையால் மாலை கவிதாஸ்ரீயின் தாய் துர்காதேவி பிரம்மதேசம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத்தொடர்ந்து போலீசார் சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு குழந்தை கடத்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் ஆய்வு செய்தனர். மேலும் வழக்குபதிவு செய்து தேடி வந்தனர். இந்நிலையில் 4 ஆம் தேதி அவரது வீட்டின் பின்புறமுள்ள மணி என்பவருக்கு சொந்தமான செயல்படாத கல்குவாரியில் உள்ள நீரில் கவிதாஸ்ரீ பிணமாக மிதந்தார். உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பிரம்மதேசம் போலீசார் விசாரணை தொடங்கினர்.

பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்துகொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் பிரம்மதேசம் போலிசார் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தார்.

Advertisment

அப்போது குற்றவாளியின் செருப்பு அங்கு கிடந்துள்ளது. அதனை கைப்பற்றி கவிதாஸ்ரீயின் தாயிடம் விசாரித்தனர்.

incident in thindivanam

அப்போது அதே ஊரைச் சேர்ந்த ராசையா மகன் மகேந்திரன் (42) என்பவர் முன்விரோதம் காரணமாக பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது தெரிய வந்தது. விசாரணையில் பழிவாங்கும் எண்ணத்தில் பாலியல் வன்கொடுமை செய்துகொலை செய்ததாக மகேந்திரன் ஒப்புக்கொண்டார். போலீசார் கைது செய்து மகேந்திரனைகடலூர் சிறையில் அடைத்தனர்.