தென்காசியில் 45 நாட்களாககாணாமல் போன புகாரில்தேடப்பட்டு வந்த பாட்டியும், பேத்தியும் சாக்கு மூட்டையில்சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மத்தளம்பாறைஅருகே 45 நாட்களுக்கு முன்பு முத்துமாலைபுரத்தைச் சேர்ந்த கோமதியம்மாள் என்ற மூதாட்டியையும் அவரது பேத்தியானஉத்ரா (எ) சாக்ஷி என்ற ஒன்றரைவயதுகுழந்தையையும் காணவில்லை எனபுகாரளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 45 நாட்களுக்குப் பின் இன்று (20.02.2021) பாட்டியும் பேத்தியும்சாக்கு மூட்டையில் அழுகிய நிலையில்சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். போலீசார்நடத்தியமுதற்கட்ட விசாரணையில், பணத்திற்காக பாட்டியும் பேத்தியும் கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சம்பவம் அங்கு பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.