தென்காசி மாவட்டத்தின் வி.கே.புதூரிலுள்ள அண்ணா மேல்நிலைப்பள்ளியான தனியார் மேனேஜ்மெண்ட் பள்ளியில் அக்கம் பக்கம் உள்ள கிராமத்தைச் சேர்ந்த சுமார் ஆயிரம் மாணவ மாணவியர் பயின்று வருகிறார்கள். இந்தப் பள்ளியில் இதே ஊரைச் சேர்ந்தமுருகன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மற்றும் வீராணத்தைச் சேர்ந்த செரீப்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) இருவரும் ப்ளஸ் 2 படித்து வருகின்றனர். இருவரும் இணைபிரியா நண்பர்கள். அன்னோன்யமாகப் பழகிய இவர்களின் நட்புமுருகன்வீட்டில்செரீப் உணவு சாப்பிடுவதும்,செரீப் வீட்டில் முருகன் சாப்பிடும் அளவுக்கு சினேகம் விரிவடைந்திருக்கிறது.

Advertisment

INCIDENT IN THENKASI...

இந்நிலையில் நண்பர்களுக்குள் கடந்த சில நாட்களாகப் பிரச்சினை இருந்து வந்திருக்கிறதாம். இந்தச் சூழலில் நேற்றைய தினம், செரீப் திடீரென்றுமுருகன் முகத்தில் குத்த, மூக்கில் அடிப்பட்டிருக்கிறது. இதையறிந்த பள்ளித் தலைமை ஆசிரியர் இருவரையும் கண்டித்து அனுப்பியிருக்கிறார். மேலும் இவர்களுக்குள் மோதல் வலுத்திருக்கிறது.

இதனிடையே இன்று காலை 10 மணியளவில் பேருந்து நிலையம் வந்த முருகன்,செரீப்பை எதிர்பார்த்துக் காத்திருந்திருக்கிறான். வழக்கம்போல முதல் பேருந்தில் வராதசெரீப் அடுத்த பேருந்தில் வரும் வரை அங்கேயே இருந்திருக்கிறான். அப்போதுசெரீப் பேருந்தில் வந்திறங்கியிருக்கிறான். அது சமயம் திடீரென அருகிலுள்ள சலூன் கடையிலுள்ள சவரக்கத்தியை எடுத்து வந்த முருகன், பள்ளிக்குச் செல்லவிருந்தசெரீப்பின்கையிலும் கழுத்துப் பக்கத்திலும் குத்தியிருக்கிறாம். காயம்பட்டு அலறியவனை மீட்டு தென்காசி அருசு மருத்துவமனைக்குச் சிகிச்சையின் பொருட்டு அனுப்பியுள்ள வி.கே.புதூர் போலீசார் வேறு எதுவும் இவர்களுக்குள் பிரச்சினை உள்ளதா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

INCIDENT IN THENKASI...

இதனிடையே முருகனை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில் பிரச்சினை காரணமாக இந்தக் கத்திக் குத்துச் சம்பவத்தில் முருகனுக்கு வெளியாட்கள் இருவர் உதவியதாகப் போலீசார் சந்தேகிக்கின்றனர். பள்ளி மாணவர்கள் மோதல் சம்பவம் அந்த ஏரியாவைப் பரபரப்பாக்கியிருக்கிறது.