தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பக்கமுள்ள சின்னத்தம்பி நாடார் பட்டியைச் சேர்ந்தவர் அணைந்த பெருமாள் (55) இவரது மனைவி பன்னீர் செல்வம் (50) கணவர் விவசாய கூலி வேலை பார்ப்பவர் மனைவி பீடி சுற்றும் தொழிலாளி. இவர்களுக்கு மணமாகி சுமார் 35 வருடங்களாகிறது. கனகராஜ் (30) திருமலைச்செல்வன் (28) என இரண்டு மகன்கள் விதியின் கோலம் பிறந்தது முதலே இந்த இரு மகன்களும் மாற்றுத் திறவாளிகள். பிறருடைய உதவியின்றி, இவர்களால் அசைய முடியாது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
இந்தக் இக்கட்டான குடும்ப நெருக்கடியை எவ்வளவோ சமாளிக்க முயன்றிருக்கிறார் அணைந்த பெருமாள். அவரால் முடியவில்லை. மோலும் இது குறித்து தன் மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்த அணைந்த பெருமாள் கடந்த இரண்டு வருடங்களாகவே மன உளைச்சலால் மன நிலை பாதிக்கப்பட்டுமிருந்தார். வேலைக்கும் சரியாகச் செல்லவில்லையாம்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தன் மனைவி பன்னீர் செல்வத்திடம், இப்படி மாற்றுத் திறனாளிப் புள்ளைகள் பிறந்ததற்கு நீ தான காரணம் என்று கூறிதகராறு செய்திருக்கிறார். அடுத்த நொடி வீட்டில் சமையலுக்காக வைத்திருந்த மண்ணெணையை எடுத்து பன்னீர் செல்வம் உடலில் மீது ஊற்றித் தீ வைத்திருக்கிறாராம். இதில் அவர் உடல் முழுவதும் பற்றி எரிந்து தீக்காயமடைய அவர் அலறியதோடு கணவரை இழுத்திருக்கிறார். இதில் அவரது நெஞ்சு வயிற்றுப் பகுதியில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டதில், நேற்று பன்னீர்செல்வம் பரிதாபமாக உயிரிழந்தார். கணவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக பாவூர்சத்திரம் எஸ்.ஐ. சின்னத்துரை விசாரணை நடத்தி அணைந்த பெருமாள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.
பரபரப்பு சூட்டைக் கிளப்பிய இந்தக் கோரச்சம்பவம் காரணமாக ஆதரவற்றவர்களாகிப் போன முற்றிலும் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி இரண்டு மகன்களின் நிலை தான் பரிதாபம்.