தேனியில் பட்டப்பகலில் சாவகாசமாக நடந்த திருட்டு... சி.சி.டி.வி காட்சி வெளியாகி பரபரப்பு! 

incident in theni- police investigation

தேனியில் பட்டப்பகலில் கடைக்குள் புகுந்து சாவகாசமாக திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தேனி மாவட்டம் லட்சுமிபுரம் பகுதியில் சீராளன் என்பவர் எலெக்ட்ரிக்கல்ஸ் ஹார்வேர்ட் கடை வைத்துள்ளார்.மதிய உணவு இடைவேளைக்குசீராளன் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில், வாடிக்கையாளர் போல் கடை முன்பு நின்றிருந்த நபர் ஒருவர் உள்ளே புகுந்து பட்டப்பகலில் கல்லாப் பெட்டியை உடைத்து உள்ளே வைக்கப்பட்டிருந்த 20 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்துசென்றுள்ளார்.

இந்த காட்சிகள் அனைத்தும் அங்கு வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி இருக்கிறது. சீராளன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டபகலில் கல்லாவை உடைத்து பொறுமையாகதிருடிச் சென்றசம்பவம்அங்கு பரபரப்பைஏற்படுத்தியுள்ள நிலையில், மர்ம நபர் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

CCTV footage police Theni
இதையும் படியுங்கள்
Subscribe