Advertisment

ஆம்புலன்ஸ் வரவில்லை... கரோனாவுக்கு பலியான தாயின் உடலைத் தள்ளுவண்டியில் எடுத்துச் சென்ற அவலம்!

incident in theni

தமிழகத்தில் நாளுக்கு நாள் கரோனாபாதிப்புஅதிகரித்து வரும் நிலையில்,இதுவரை கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை4,034 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் தேனியில் கரோனாவால் உயிரிழந்த தாயின் உடலைத்தள்ளுவண்டியில் கிடத்திமகன் தள்ளிச்சென்ற அவலம் அரங்கேறியுள்ளது.

Advertisment

தேனியில் கடந்த சில நாட்களாகவே கரோனாவால்பாதிக்கப்படுவோர்எண்ணிக்கைஅதிகரித்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதில் காலதாமதம் ஏற்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில்உயிரிழந்தவர்களை ஆம்புலன்ஸில் எடுத்துச் செல்லவும் காலதாமதம் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

Advertisment

தேனியில் ஒரே நாளில் நான்கு, ஐந்து பேர் உயிரிழக்கும் நிலை தொடர்ந்து வருகிறது. ஆம்புலன்ஸுக்கு பற்றாக்குறை நிலவி வருவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.இன்று தேனி, கூடலூரில் கரோனாவால் உயிரிழந்த தாயின்உடலை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வராததால், தாயின்மகனே தள்ளுவண்டி ஒன்றை வாடகைக்கு எடுத்து அவரது உடலை எடுத்துச் சென்றார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தைஏற்படுத்தியுள்ளது.

Ambulance corona virus Theni
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe