theni

சின்னமனூர் அருகே கணவரின் குடிப்பழக்கத்தால் மனமுடைந்த மனைவி,இரண்டுமகன்களை கொன்று தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

தேனி மாவட்டத்திலுள்ள சின்னமனூர் அருகே இருக்கும் கண்ணிசேர்வைபட்டியைசேர்ந்த லாரி டிரைவர் பிரபு இவருடைய மனைவி பெயர் பவித்ரா. இவர்களுக்கு ரக்ஷன், லக்ஷன் என இரண்டு மகன்கள் உள்ளனர். ஆனால் லாரி டிரைவர் பிரபு குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் தினமும் வீட்டு செலவுக்கு பணம் கொடுக்காமல் இருந்து வந்துள்ளார். இதனால் தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கரோனா வைரஸால் கடந்த 75 நாட்களாக பிரபு வேலைக்கு செல்லவில்லை. மேலும் கடன் வாங்கியும் நகைகளை விற்றும் குடித்துள்ளார்.

Advertisment

அதைக் கண்டு மனைவி கணவருக்கு பலமுறை அறிவுரை கூறியும் திருந்ததால் பவித்ரா மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் மனமுடைந்த பவித்ரா நேற்று முன்தினம் இரவு கணவர் இல்லாத நேரத்தில் குளிர் பானத்தில் விஷத்தை கலந்து தனது இரண்டு மகன்களுக்கும் கொடுத்து கொன்றுவிட்டு, தானும் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

நேற்று காலை நீண்ட நேரமாக கதவு திறக்காததால் அக்கம் பக்கத்தினர் சந்தேகமடைந்து சின்னமனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் தலைமையிலான போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது இரண்டு மகன்களும் இறந்து கிடக்க, பவித்ரா வாயில் நுரை தள்ளியபடி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

Advertisment

அவரை உடனடியாக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது அதோடு ரக்ஷன், லக்ஷன் உடல்களை பிரேத பரிசோதனைக்காக சின்னமனூர்அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இப்படி கணவரின் குடிப்பழக்கத்தால் இரண்டு குழந்தைகளையும் விஷம் வைத்துக் கொன்று தானும் தற்கொலைக்கு முயற்சி செய்த அடிப்படையில் கணவர் பிரபுவை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால்தேனி மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.