Advertisment

சிறுவனுக்கு பாலியல் கொடுமை!! மருத்துவமனையில் சிகிச்சை...

incident in thanjai

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன், பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடி விட்டு வீடு சென்ற சிறுவனை, அதே பகுதியைச் சேர்ந்த வேன் ஓட்டுநர் சக்திவேல் (28) என்பவர்சிறுவனை வீட்டிற்குள் அழைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

Advertisment

சிறுவன் மறுத்தபோது, உனது குடும்ப பெண்களின் படங்களை ஆபாச படங்களாக இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி வற்புறுத்தி ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பிறகு அழுது கொண்டே வீட்டிற்கு சென்ற சிறுவன் சக்திவேல், வீட்டில் நடந்தவற்றை பெற்றோர்களிடம் கூறியுள்ளான். இந்த சம்பவம் குறித்து பெற்றோர் பேராவூரணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். ஆனால் போலீசார் இருதரப்பையும் அழைத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். வழக்கு பதிவு செய்யவில்லை.

Advertisment

incident in thanjai

இந்த நிலையில் சக்திவேல் தாக்கியதாலும் கட்டாயமாக பாலியல் தொல்லை கொடுத்ததாலும் உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுவனைபெற்றோர் பேராவூரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்,சிறுவன் சிகிச்சைபெற்றுவருகிறார். சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோர், பேராவூரணி காவல்நிலையத்தில் திங்கள்கிழமை மீண்டும் புகார் அளித்துள்ளனர். மேலும், சக்திவேல் தங்களை மிரட்டி, தங்கள் குடும்ப பெண்களை மார்பிங் செய்து, ஆபாசமாக முகநூலில் பதிவேற்றம் செய்வதாக அச்சுறுத்துவதாகவும், காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனபாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார் தெரிவித்தார். புகாரை பெற்ற பேராவூரணி போலீசார் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்து மிரட்டிய வேன் ஓட்டுநர் சக்திவேலை கைது செய்துள்ளனர்.

police Sexual Abuse Thanjavur
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe