Skip to main content

மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு - துணி காய வைத்தபோது நிகழ்ந்த சோகம்

 

incident in thalavadi- police investigation

 

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணன் (50) கூலித் தொழிலாளி. இவரது மகள் ஜோதி (26). இவருக்கும் கர்நாடக மாநிலம் சிக்மங்களூர் மாவட்டம் எம்சள்ளி கிராமத்தைச் சேர்ந்த சிவராஜ் (33) என்பவருக்கும் கடந்த 6 வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தாளவாடியில் உள்ள பாளையம் எனும் கிராமத்தில் தனது தந்தை வீட்டில் 8 மாதமாக குழந்தையுடன்  ஜோதி வசித்து வந்தார்.

 

இந்நிலையில் நேற்று மதியம் ஜோதி துணி துவைத்து விட்டுத் துணியை அங்கு வழக்கம் போல் காய வைக்கும் கம்பியில் போட்டுள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசி மயக்கம் அடைந்துள்ளார். உறவினர்கள் அவரை மீட்டு தாளவாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தார். பின்னர் அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து தாளவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !