Incident in temple festival; Panic in dharmapuri

தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் திருவிழா நிகழ்ச்சியில் சாமி ஊர்வலத்தில் பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர்உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவத்தில் நான்கு பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

Advertisment

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பெரியாண்டிச்சி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதன் காரணமாக நேற்று இரவு சாமி ஊர்வலம் நடைபெற்றது. அப்பொழுது கோவில் விழாக் குழு சார்பில் பட்டாசு வெடிக்கப்பட்டது. அப்பொழுது, அருகில் மினி வேனில் வைக்கப்பட்டிருந்த மற்ற பட்டாசுகள் மீது தீப்பொறி பட்டது. இதில் அனைத்து பட்டாசுகளும் வெடித்து சிதறியது. இதனால் ஊர்வலத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் நான்காபுறமும் சிதறியடித்து ஓடினர். இந்த வெடி விபத்தில் ஒரு இளைஞர் மற்றும் மூன்று குழந்தைகள் படுகாயமடைந்தனர். 4 பேரும் தர்மபுரி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பெற்று வந்த விஜயகுமார் என்ற இளைஞர் உயிரிழந்த நிலையில், மற்ற மூன்று குழந்தைகள் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.