Advertisment

திருமணத்திற்கு மறுத்த ஆசிரியை படுகொலை; இளைஞர் வெறிச்செயல்!

incident of teacher who refused to marry

Advertisment

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் அருகே உள்ள சின்னமனை பகுதியைச் சேர்ந்தவர் ரமணி (26). இவர் மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், சின்னமனை பகுதியைச் சேர்ந்த மதன்(30) என்பவருக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்ய முடிவு செய்தனர். அவருக்கு ரமணியை பெண் கேட்டு சென்றுள்ளனர். ஆனால் ரமணி, மதனைத் திருமணம் செய்ய விருப்பமில்லை என கூறியதாக தெரிகிறது. இதனால், ஆத்திரத்தில் இருந்த மதன் இன்று காலை ரமணி பணியாற்றும் பள்ளிக்குச் சென்று அங்கு வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ரமணியின் கழுத்து பகுதியில் அவர் மறைத்துக் கொண்டுவந்த கத்தியால் குத்தினார்.

இதில், ரத்தம் பீறிட ரமணி சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். உடனே சக ஆசிரியர்கள் ரமணியை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ரமணி இறந்தார். இது குறித்து சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து மதனைக் கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

arrested police Youth teacher
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe