கன்னியாகுமரியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் கையில் கயிறு கட்டியநிலையில், குளத்தில் இறங்கி தற்கொலை முயற்சி மேற்கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகிலுள்ள சுசீந்திரத்தில், இளைய நாயனார்குளத்தில் மூன்று பெண்கள் தங்கள் கையில் கயிறு கட்டிக்கொண்டு குளத்தில் இறங்கி தற்கொலைக்கு முயன்றதாக தகவல்கள் வெளியான நிலையில், மூழ்கிய மூவரும் மீட்கப்பட்டனர்.அதில் இருவர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
உயிருடன் மீட்கப்பட்டவர் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிர் பிழைத்த அவரிடம் போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில், உயிரிழந்தவர்கள் பெயர் பங்கஜம்,அவரது சகோதரி மாலா என்பதும்தெரியவந்தது. உயிரோடு மீட்கப்பட்டவர்உயிரிழந்தவர்களின் தாய், பெயர் சச்சு என்பதுவிசாரணையில் தெரியவந்துள்ளது.பங்கஜத்திற்கு 48 வயதும், மாலாவிற்கு40 வயதும்ஆகும்நிலையில்இருவருக்கும்திருமணம் ஆகவில்லை.மேலும் தன் கணவர்உயிரிழந்த நிலையில்வறுமை காரணமாக மன உளைச்சலில் இருந்ததால் தற்கொலை செய்ய முடிவெடுத்து அதிகாலை குளத்தில் கைகளில் கயிறை கட்டி இறங்கியதாகவும்தெரிவித்துள்ளார்.