Advertisment

மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்; மருத்துவர் கைது

nn

Advertisment

மருத்துவ மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மருத்துவர் கைது செய்யப்பட்டசம்பவம் சிதம்பரத்தில் நிகழ்ந்துள்ளது.

சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவரும் தற்போது மதுரை தனியார் மருத்துவமனையில் பணிபுரிகின்ற மருத்துவருமான மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ரகுராமன் என்பவரின் மகன் சதீஷ்குமார் (27) இவர் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மாணவியியை காதலிப்பதாக ஆசை வார்தை கூறி அவரிடம் அடிக்கடி வீடியோ காலில் பேசி மாணவியின் படத்தை பெற்று ஆபாசமாக சித்தரித்து வலைதளத்தில் பரப்பியுள்ளார். மேலும் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவுசெய்யப்பட்டது. பின்னர் சதீஷ்குமார் குறித்த விசாரணையில் அவர் பல்வேறு பெண்களிடம் இதுபோன்று நடந்து கொண்டுள்ளார் என்பது காவல்துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து மருத்துவர் சதீஷ்குமார் சிதம்பரத்தில் கைது செய்யப்பட்டுசிறைக்கு அனுப்பட்டுள்ளார். மருத்துவ மாணவி படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூகவலைத்தளத்தில் பரப்பிய சம்பவம், பாலியல் துன்புறுத்தல் சம்பவம் சிதம்பரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisment

ஆனால் இதுகுறித்து அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) அமுதாவிடம் கேட்டபோது அதுகுறித்து இன்னும் விசாரிக்கவில்லை. அதன் விவரம் முழுவதும் தெரியாது என செய்தியாளர்களிடம் கூறினார்.

இதையும் படியுங்கள்
Subscribe