தமிழகத்திற்கே கல்விக்கண் திறந்தவர் காமராஜர். அந்தப் பெருந்தலைவரின் திருவுருவச் சிலையில் செருப்பை வைத்து அவமதித்துவிட முடியுமா? இத்தகைய இழிசெயலைச் செய்தவர், நிச்சயம் அகக்கண் அற்றவராகத்தான் இருப்பர். ஸ்ரீவில்லிபுத்தூரில் அப்படி ஒரு சம்பவம் இன்று நடந்து பலரையும் கொந்தளிக்கச் செய்துவிட்டது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kamarajar silai arukae paraparappu.jpg)
ஸ்ரீவில்லிபுத்தூர் ராமகிருஷ்ணாபுரத்தில் காமராஜரின் வெண்கல சிலை உள்ளது. யாரோ விஷமிகள், அச்சிலையின் மீது செருப்பை வைத்துவிட்டார்கள். ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காங்கிரஸ் கமிட்டி காவல்துறையிடம் புகார் மனு அளித்தது. இதனைக் கண்டித்து அந்தப் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனால், காமராஜர் சிலை இருந்த பகுதி பரபரப்பானது.
காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஜெயராம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த ஏரியாவில் பொருத்தப்பட்டுள்ள் சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்துவரும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow Us