incident in sengam

Advertisment

உலகமே கரோனாவால் பாதிக்கப்பட்டு மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர், பொருளாதாரம் அதள பாதாளத்துக்கு போயுள்ளது. நாட்டு மக்கள் தங்களிடம் பணமில்லாமல் அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்துக்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியாவில் தினந்தினம் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தேசிய அளவில் காங்கிரஸ், இடதுசாரிகள், மாநில கட்சிகள் எதிர்ப்புக் குரல் கொடுத்தும் மத்தியரசு, பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் நாடு முழுவதும் காங்கிரஸ், இடதுசாரிகள் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டுமென போராட்டங்கள் நடத்திவருகின்றனர். அதன்படி, திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நகரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ஜூன் 4ஆம் தேதி போராட்டம் நடைபெற்றது.

Advertisment

அந்த போராட்டத்தில் பெட்ரோல் விலை உயர்வால், வாகனத்துக்கு பெட்ரோல் போட முடியவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி இருசக்கர வாகனம் ஒன்றை இளைஞர்கள் கயிறு கட்டி இழுத்துச் செல்வது போல் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தை செங்கம் நகர போலீஸார் மறித்து தடுத்து நிறுத்தி, போராட்டத்தில் ஈடுப்பட்ட 20 இளைஞர்களை கைது செய்து தனியார் மண்டபம் ஒன்றில் அடைத்து வைத்தர்.

அந்த இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்த போலீஸார், அதனை காவல்நிலையத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். வழக்கில் அந்த வாகனத்தையும் சேர்க்கவுள்ளனர் என்கின்றனர் காவல்துறை தரப்பில்.