சேலத்தில்மஜாஜ்சென்டர்நடத்திவந்த பெண் கொலை செய்யப்பட்டு சூட்கேசில் உடல் வைக்கப்பட்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம்அஸ்தம்பட்டியைச் சேர்ந்தவர் நடேசன். திமுகவிலிருந்து அதிமுகவில் இணைந்த முன்னாள் நகராட்சி கவுன்சிலரான இவர், குமாரசாமிபட்டியில்வீடுகள் கட்டி வாடைக்கு விட்டுள்ளார். இவரது வீட்டின் இரண்டாவது மாடியில்கர்நாடகாவைச்சேர்ந்த முகமதுசதாம், தனது மனைவி தேஜஸ்மோண்டல்உடன் இரண்டு வீடுகள்எடுத்துத்தங்கியிருந்தார். சேலம் அழகாபுரம்,பள்ளப்பட்டி,அஸ்தம்பட்டிஆகிய இடங்களில் முகமது சதாம் - தேஜஸ் மோண்டல் தம்பதியினர் மசாஜ்சென்டர்நடத்திவந்தனர். ஒரு வீட்டில் கணவன் மனைவியும், இன்னொரு வீட்டில்மசாஜ்சென்டரில்பணிபுரியும் பெண்களும் தங்கியிருந்தனர்.
கடந்த 10 நாட்களுக்கு மேலாக கூடுதலாக 3 பெண்கள்தேஜஸ்மோண்டல்வீட்டுக்கு வந்து தங்கிமசாஜ்சென்டரில்வேலை செய்துவந்தனர் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில், கடந்த நான்கு நாட்களுக்கு முன்புசதாம்வேலைவிஷயமாகசென்னை வந்துள்ளார். அதனையடுத்து, சென்னையிலிருந்து மனைவிதேஜஸைசதாம்அழைக்க அவர்செல்ஃபோனைஎடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் வீட்டின் உரிமையாளர் நடேசனை தொடர்புகொண்ட சதாம், வீட்டில் சென்றுபார்க்கச் சொல்லியுள்ளார். இதனையடுத்துவீட்டுக்குச் சென்ற நடேசன், சதாம் - தேஜஸ் தம்பதி தங்கியிருந்த வீட்டைப் பார்த்துள்ளார், அது பூட்டியிருந்துள்ளது. அருகில்மசாஜ்சென்டரில்பணிபுரியும் பெண்கள் தங்கியிருந்த வீட்டையும் பார்த்துள்ளார். அந்த வீடும் பூட்டப்பட்டிருந்தது. ஆனால் அந்தவீட்டிலிருந்துதுர்நாற்றம் வீசுவதை அறிந்த நடேசன், காவல்துறைக்குத்தகவல் கொடுத்தார்.
அதனையடுத்து அங்கு வந்தபோலீசார்வீட்டிற்குள் சென்று பார்க்கையில் வீட்டின் அலமாரியில் சந்தேகப்படும் வகையில் ஒரு பெரிய சூட்கேஸ் இருந்துள்ளதைக் கண்டு, அதனைத்திறந்து பார்க்கையில் உள்ளே பெண் சடலம் ஒன்று இருந்தது. அது தேஜஸ் மோண்டலின் உடல் என்பதை ஊர்ஜிதம் செய்த போலீசார், உடலைபிரேதப் பரிசோதனைக்காகச்சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தடயவியல் நிபுணர்கள் கைரேகைகளை ஆய்வுசெய்து தடயங்கள்சேகரிக்கப்பட்டள்ளன. மேலும், இது தொடர்பாகதேஜஸின்கணவர் முகமது சதாமிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்தக் கொலை சம்பவம் சேலம்அஸ்தம்பட்டிபகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.