
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த ரயில்ரோடு பகுதியில் வசித்து வருபவர்தன்ராஜ்சவுத்ரி. வடமாநிலத்தைச் சேர்ந்தஇவர் சீர்காழிதர்மகுலம் பகுதியில் அடகுக் கடையும், நகைக் கடையும் நடத்தி வருகிறார்.
தன்ராஜ் தனதுமனைவி, மகன், மருமகளுடன்வசித்து வரும் நிலையில்,இன்று காலை6 மணியளவில் வீட்டு வாசலில், இந்தியில் பேசி சிலர்அவரைஅழைத்துள்ளனர். அப்பொழுது வீட்டின் கதவைதன்ராஜ் திறக்க, வெளியே நின்றுகொண்டிருந்த மர்ம நபர்கள் வீட்டின் உள்ளே சென்றுதன்ராஜைசரமாரியாக தாக்கியுள்ளனர்.அவரதுஅலறல் சத்தம் கேட்டு தன்ராஜின் மனைவி மற்றும் மகன் ஆகியோர்வந்தபோது அவர்களையும் அந்த மர்ம கும்பல்தாக்கியுள்ளது.

இந்த தாக்குதலில் தன்ராஜின் மனைவி ஆஷா,அவரதுமகன் அகில் ஆகியோர்சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தன்ராஜும் அவரது மருமகளும் படுகாயத்துடன் மீட்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை எஸ்.பிவிசாரணை மேற்கொண்டு வருகின்றார்.
விசாரணையில் வீட்டில்இருந்த17 கிலோதங்க நகையைக் கொள்ளையடித்துச் சென்றஅந்த மர்ம கும்பல்,வீட்டில்பொருத்தப்பட்டிருந்தசிசிவிடிகாட்சிகளில் தாங்கள் சிக்கிவிடலாம் என எண்ணி சிசிடிவி கேமராவின் ஹார்ட்டிஸ்க்கையும் எடுத்துச் சென்றது தெரியவந்துள்ளது. அதேபோல்கொள்ளையடித்த நகையுடன்மர்ம கும்பல் தன்ராஜின் காரிலேயேதப்பித்து சென்றுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்தக் கார்ஒரு கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், சீர்காழி போலீசார் விசாரணையில் இறங்கியுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)