Advertisment

படம் பார்த்துவிட்டு பள்ளி மாணவன் செய்த பகீர் சம்பவம்; எச்சரித்து அனுப்பிய போலீசார்!

incident of a school student after watching the film; The police sent a warning

பள்ளி மாணவன் ஒருவன்திரைப்படத்தைபார்த்துவிட்டுகாவல் நிலையத்திலேயே வெடிகுண்டு வைத்திருப்பதாகபோலீசாருக்குதகவல் கொடுத்த சம்பவம் வாழப்பாடியில் நிகழ்ந்துள்ளது.

Advertisment

சேலம் மாவட்டம் வாழப்பாடி காவல் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக நேற்று அவசர அழைப்பு எண்ணான 100க்கு தகவல் ஒன்று கொடுக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் வாழப்பாடி காவல் நிலையத்தில்முழுமையாகச்சோதனையிட்டனர். ஆனால் அந்த தகவல் முற்றிலும் போலியானது என்பதுசோதனைக்குப்பின் தெரிய வந்தது.

Advertisment

வெடிகுண்டு இருப்பதாகதகவலளித்ததுசிறுவன் என்பதால் இது குறித்துபோலீசார்விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பேளூரை சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவன் அவசர அழைப்பு எண்ணான 100-ஐ தொடர்பு கொண்டு காவல் நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாகத்தெரிவித்தது தெரிய வந்தது. அந்த சிறுவனை வாழப்பாடி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தபோலீசார்அவனிடம் விசாரணை நடத்தியதில் சில நாட்களுக்கு முன்புபீஸ்ட்படம் பார்த்ததாகவும் அதில்மாலில்வெடிகுண்டு வைப்பது போன்ற காட்சி இருப்பதை பார்த்து அதேபோல் பயத்தைஉருவாக்ககாவல் நிலையத்திலேயே வெடிகுண்டுஇருப்பதாகதெரிவித்ததாகக்கூறியுள்ளான். பின்னர் அந்த சிறுவனை எச்சரித்தபோலீசார்இனி இப்படி நடந்து கொள்ளக் கூடாது என எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Vazhapadi police Salem
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe