Advertisment

சாத்தான்குளத்தில் மீண்டும் ஒரு அதிர்ச்சி... 7 வயது சிறுமி!!!

incident in sathankulam

Advertisment

சாத்தான்குளத்தில் 7 வயது சிறுமி கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாத்தான்குளத்தில் இன்று காணாமல் போன 7 வயது சிறுமியை உறவினர்கள் தேடி வந்த நிலையில் பாலத்திற்கு கீழ், உடலில் காயங்களுடன் சிறுமி கண்டெடுக்கப்பட்டார்.சடலமாக கண்டெடுக்கபட்ட சிறுமியின்மீது ஏற்பட்டுள்ள காயங்களை வைத்து சிறுமி பாலியல் வன்கொடுமை உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தகவல்கள் பரவியதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு, உடற்கூறு ஆய்வுக்காகஅனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தில் 19 வயதுடைய இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.அதில் ஒருவர் முதலாம் ஆண்டு கல்லூரி படித்து வரும் நபர் என்பது குறிப்பிடத்தகுந்தது. இவர்கள் இருவரும் போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள் என்பதும்,அதேபோல் கிராமத்தில் பல்வேறு விரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததாகவும் அவர்கள் மீது குற்றச்சாட்டுகளை அப்பகுதி மக்கள் வைக்கின்றனர். ஏற்கனவே சாத்தான்குளத்தில் காவலர்களால் துன்புறுத்தப்பட்டு தந்தை, மகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், 7 வயது சிறுமி கொலையானசம்பவம் அப்பகுதியில் மீண்டும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

police incident sathankulam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe