
சேலத்தில் நீதிமன்ற பெண் ஊழியரிடம் செயின் பறிப்பு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் நீதிமன்ற பெண் ஊழியர் உட்பட இரண்டு பேரிடம் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் செயின் பறிப்பில் ஈடுபட்டனர். கண்ணாடி மேல் பகுதியில் நீதிமன்ற ஊழியர் பரமேஸ்வரி, ஜெயமேரி என்பவர்களிடம் தொடர்ந்து அடுத்தடுத்து செயின் பறிப்பு சம்பவம் நடந்துள்ளது. இந்த செயின் பறிப்பு சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.நீதிமன்ற ஊழியரிடமே செயின் பறிக்கப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow Us