Skip to main content

5 வயது மகளை கொன்றுவிட்டு மாற்றுத்திறனாளி தம்பதி தற்கொலை!! 

Published on 15/05/2021 | Edited on 15/05/2021

 

Incident in salem

 

சேலம் மாவட்டத்தில் ஐந்து வயது மகளை தாய் தந்தையே கொன்று தாங்களும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

சேலம் மாவட்டம் மூணாங்காடு அருகே 5 வயது மகள் நந்திதாவை கொலை செய்துவிட்டு மாற்றுத்திறனாளி தம்பதிகளான கோபிநாத்-பவித்ரா தம்பதியினர் தற்கொலை செய்து கொண்டனர். இதுதொடர்பாக தகவல் அறிந்த அன்னதானப்பட்டி போலீசார் விரைந்து வந்து சடலங்களை மீட்டு இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாற்றுத்திறனாளி தம்பதிகள் 5 வயது மகளை கொலை செய்துவிட்டு, தாங்களும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்