இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அடுத்த துரோபதி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பவித்ரா. இவரது ஒன்றரை வயது பெண் குழந்தை மௌனிகா மயக்கமாகிவிட்டார் என நவம்பர் 23ந்தேதி மருத்துவமனைக்கு கொண்டு வந்து மருத்துவர்களிடம் காட்டியுள்ளார் பவித்ரா.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/zaawawaw.jpg)
குழந்தை மூச்சு திணறி இறந்துள்ளதை அறிந்த மருத்துவர்கள் எப்படி இது நடந்தது என கேட்டபோது, பவித்ரா முன்னுக்குபின் முரணாக பதில் சொல்லியுள்ளார். அதோடு, குழந்தையின் கழுத்தை நெறித்ததற்கான வடு இருந்துள்ளது. இதனைப்பார்த்து அதிர்ச்சியான மருத்துவர்கள் இதுப்பற்றி காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
வாலாஜாபேட்டை நகர போலீஸார் மருத்துவமனைக்கு வந்து தாய் பவித்ராவிடம் விசாரணை நடத்தியுள்ளார். விசாரணையில், தொடர்ந்து குழந்தை அழுததால் எரிச்சலில் முகத்தில் துணியை அழுத்தி குழந்தையை கொன்றதாக பவித்ரா கூறியதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து அவரிடம் போலீஸார் அது உண்மையான காரணம்தானா என விசாரணை நடத்திவருகின்றனர்.
Follow Us