incident in ranipettai

Advertisment

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மனைவி ஆசைக்கு இணங்க மறுத்ததால் பிறந்து 40 நாட்களே ஆன பச்சிளங் குழந்தையை தந்தை கொன்ற அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்தவர்கள் மனோ-அம்சா தம்பதியினர். இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்து 40 நாட்கள் ஆன நிலையில் குழந்தைக்கு யுவன் என பெயர் வைத்திருந்தனர். இன்று நள்ளிரவு2 மணிமுதல்குழந்தையை காணவில்லை என குழந்தையின் தாய்அம்சா பல்வேறு இடங்களில் தேடியுள்ளார். அப்போது குழந்தை கழிவறையில் உள்ள வாளியில் தண்ணீருக்குள் சடலமாக இருந்தது கண்டு அதிர்ந்துள்ளார் அம்சா. மனைவி ஆசைக்கு இணங்க மறுத்ததால் ஆத்திரத்தில் தந்தை மனோ குழந்தையை வாளி தண்ணீரில் அமுக்கி கொலை செய்தது தெரிய வந்த நிலையில், கொடூரன்மனோவை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.