Advertisment

மனைவி இறந்த துக்கத்தில் மின்கம்பத்தில் ஏறி கணவர் தற்கொலை!

INCIDENT IN RANIPETTAI

Advertisment

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை பேரூராட்சியில் உள்ள நடுத்தெருவில் வசிப்பவர் ஜீவானந்தம். 42 வயதாகும் கூலித் தொழிலாளியான இவரது மனைவி இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்துள்ளார்.

இவரது மனைவி இறந்தது முதல் மனவிரக்தியில் இருந்துள்ளார், பலரும் அவரை அதிலிருந்து வெளியே கொண்டு வர முயற்சி செய்தும் பலனில்லை. இந்நிலையில் கரோனா பரவலை முன்னிட்டு கடந்த 2 மாதமாக வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்துள்ளார். இது அவரது மனதை வெகுவாகப் பாதித்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தனது வீட்டுக்கு அருகில் உள்ள மின்கம்பத்தில் மே 31ஆம் தேதி மதியம் ஏரி மின் கம்பியைப் பிடித்துள்ளார். மின்சாரம் பாய்ந்து மின்கம்பியில் சிக்கி இறந்துள்ளார். மின் கம்பத்தில் இருந்து அவரது சடலத்தை மீட்ட மின்வாரிய மற்றும் காவல்துறையினர் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

incident
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe