Advertisment

தொடர்ந்து நீட்டில் தோல்வி... மாணவனின் தற்கொலை குறித்து போலீசார் விசாரணை!

incident in puzhal... police investigation

தொடர்ந்து நீட் தேர்வு எழுதியும் இடம் கிடைக்காததால் மனஉளைச்சலில் இருந்த மாணவன், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Advertisment

சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டம் புழல் காவாங்கரை பகுதியைச் சேர்ந்தவர் சுஜித். சுஜித்தின் அப்பா வெளிநாட்டில் பணிபுரிந்துவரும் நிலையில், தாயுடன் சுஜித் வசித்துவந்தார். 2019ஆம் ஆண்டுமுதல் மூன்றுமுறையாக சுஜித் நீட் தேர்வு எழுதிய நிலையில், மூன்று முறையும் தோல்வியடைந்ததால் மருத்துவ படிப்பில் இடம் கிடைக்கவில்லை. இதனால் மாணவன் சுஜித் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

Advertisment

இந்நிலையில், வீட்டில் மின்விசிறியில் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டார். இதனைக் கண்டு அதிர்ந்த மாணவனின் தாய், புழல் காவல் நிலையத்திற்குப் புகார் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சுஜித்தின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவத்திற்குத் தேர்வு தோல்விதான் காரணமா என்பது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

police puzhal
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe