Advertisment

மகன் இறந்து சடலம் வீட்டுக்கு வந்ததும்  தந்தையும் இறந்தார்... சோகத்தில் மூழ்கிய கிராமம்

அரையப்பட்டியில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்த மகன் சடலம் வீட்டிற்கு கொண்டுவந்தபோது அதிர்ச்சியில் தந்தையும் உயிரிழந்த சம்பவம் அந்தக் கிராமத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisment

incident in pudukottai-The village full of tragedy

Advertisment

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் உள்ள அரையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 75). விவசாயியான இவரது மகன் ராஜாங்கம் (வயது 46). வாரச்சந்தைகளில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். ராஜாங்கத்துக்கு திருமணமாகி மனைவி மற்றும் 5 மகள்கள் ஒரு மகன் உள்ளனர்.

3 மகள்களுக்கு திருமணமாகிவிட்டது. ராஜாங்கத்துக்கு சிலநாட்களுக்கு முன்பு வயிற்று வலி ஏற்பட்டதால் இன்று புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்துவிட்டார். இதையடுத்து அவரது உடல் சொந்த ஊரான அரயப்பட்டி கிராமத்திற்கு ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது, மகன் இறந்ததை அறிந்த ஆறுமுகம், அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மகனும் தந்தையும் அடுத்தடுத்து உயிரிழந்தது அந்தக் கிராமத்தினரையே சோகத்தில் ஆழ்த்தியது. ராஜாங்கத்தின் உடலுக்கு இறுதிச் சடங்கு நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், ஆறுமுகமும் இறந்ததால் இருவருக்கும் இறுதிச் சடங்கு நடத்த உள்ளதாக உறவினர் கூறுகின்றனர்.

death incident pudukkottai
இதையும் படியுங்கள்
Subscribe