திருமணத்திற்கு சில நாட்களே உள்ள நிலையில் தி.மு.க. இளைஞரணி பிரமுகர் வெட்டிக் கொலை...

INCIDENT IN PUDUKOTTAI DMK

திருமணத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளரை வெட்டி படுகொலை செய்யப்படடுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலச்சந்தர். திமுக இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளரான இவர் மீது 6 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. ஆள் வைத்து வழிப்பறி சம்பங்களில் ஈடுபட்டு சிறைக்கு சென்று திரும்பியவர். அடக்கமுடியாத ஜல்லிக்கட்டு காளைகளும் வைத்துள்ளார்.

சனிக்கிழமை இரவு தனது பண்ணைக்கு சென்றவர் அங்கு ஒரு கும்பல் தன்னை தாக்க வருவதை பார்த்து தப்பிச்செல்ல காரில் ஏறியபோது அந்த கும்பல் காருக்குள் வைத்தே வெட்டிக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்திற்கு இலுப்பூர் பகுதியைச் சேர்ந்த ஒரு ஆளுங்கட்சி பிரமுகர் ஒருவர் மீதும் போலீசார் சந்தேகமடைந்துள்ளனர்.

police Pudukottai
இதையும் படியுங்கள்
Subscribe