incident in pudukottai

புதுக்கோட்டை மாவட்டம் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள கோட்டைப்பட்டினத்தில் ஒரு படகில் மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவர்களை இலங்கை கடற்படை கடலில்மூழ்கடித்து கொன்றது. அவர்கள் 4 பேரும் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர்கள். 6 நாட்களுக்கு பிறகு 4 மீனவர்களின் சடலங்களும் அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், மற்றொரு சோகம் மண்டபம் பகுதி மக்களை மேலும் கவலையில்ஆழ்த்தியுள்ளது.

Advertisment

சனிக்கிழமை மாலை கோடியக்கரைக்கு மீன்பிடி வலையைகொண்டுபோய் கொடுத்துவிட்டு மண்டபம் நோக்கி ஒரேகாரில் பயணித்த 8 பேரும் கோட்டைப்பட்டினம் தெற்கு புதுக்குடி அருகே போய்க் கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி மோதி மண்டபம் முகாமைச் சேர்ந்த பிச்சை மகன் கிளிஸ்ட்டாஸ்(39), மதியப்பன் மகன் சேசுப்பிள்ளை(17), தங்கச்சிமடம் எஸ்.ஆரோக்கியம்(41) ஆகிய3 பேரும் உடல் நசுங்கி அந்தஇடத்திலேயே இறந்தனர். மேலும் அதே காரில் இருந்த தங்கச்சி மடத்தைச் சேர்ந்த எஸ்.சன்ராஜ்(45), எஸ்.பிராங்கிளின்(40), ஏ.கிரீன்சன்(33), ஆர்.ஜான்சன்(56), ஆர்.பாக்கியராஜ்(48) ஆகிய 5 பேரும் படுகாயமடைந்தனர்.இதைதொடர்ந்து, அவர்கள் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இப்படி அடுத்தடுத்த துயரச் சம்பவத்தால், கிழக்கு கடற்கரை பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.