incident in pudukottai

யூ-டியூப் மூலம், சமையல் தொடங்கி சாராயம் காய்ச்சுவது வரைசெய்துவிட்டனர். எத்தனையோ நல்ல விஷயங்கள் யூ-டியூப் போன்ற சமூகவலைதளங்களில் வெளியானாலும் கூட பலர் அதற்கு எதிர்மாறான வீடியோக்களை பார்த்து அதனைச் செய்து பார்க்கிறார்கள். அதிலும் கரோனா ஊரடங்கு காலத்தில் தான் அதிகம். இப்படி யூ -டியூப் மூலம் துப்பாக்கி தயாரிப்பது எப்படி என்ற வீடியோவை பார்த்து இரு இளைஞர்கள் துப்பாக்கி தயாரித்த போது சிக்கியுள்ளனர்.

Advertisment

incident in pudukottai

புதுக்கோட்டை அருகில் உள்ள உடையனேரி காலனியில், அமுதா என்பவரது ஓட்டு வீட்டில் கூகுள் செயலி பார்த்து சட்டவிரோதமாக நாட்டுத் துப்பாக்கி தயாரித்த சிவா (எ) சிவகுமார்(19), மாரி (எ) மாரிமுத்து (21) ஆகிய இருவரையும் கணேஷ் நகர் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கி மற்றும் துப்பாக்கி தயார் செய்ய பயன்படுத்தப்படும் உபகரணங்களையும் பறிமுதல் செய்தனர்.

Advertisment

கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த போலீசார், இச்சம்பவம் குறித்து, மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். யூ-டியூப் பார்த்து இன்னும் என்னவெல்லாம் செய்யப் போகிறார்களோ.