7 வயது குழந்தையை கொடூரமாக கொன்ற வழக்கில் இளைஞர் மீது குண்டாஸ்...

incident pudukottai

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோயில் தாலுகா ஏம்பல் கிராமத்தில் கடந்த மாதம் 7 வயது சிறுமி காணாமல் போன மறுநாள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுகிழவிதம்மம் ஊரணியில் கொடிகளுக்கு மத்தியில் சடலமாக மீட்கப்பட்டார்.

தொடர்ந்து சிறுமியை கொன்ற வழக்கில் அதே பகுதியை சேர்ந்த சாமிவேல் என்கிற ராஜாவை போலீசார் கைது செய்தனர். “அண்ணா என்னை விட்ரு என்று கதறினார் அந்த சிறுமி, ஆனால் வெளியே சொல்லிவிடுவார்என்று வேலிக்கருவை மரத்தால் அடித்து கொன்றேன்” எனவாக்குமூலம் கொடுத்தான் அந்த கொடூரன்.தொடர்ந்து கைது செய்யப்பட்டு புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த வாரம் மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்று தங்க வைக்கப்பட்டிருந்தபோது போலீசாரை ஏமாற்றி தப்பி ஓடிவிட்டதாக தகவல் வர, போலீசார் சுமார் 10 மணி நேரத்தற்கு மேல் எஸ்.பி. பாலாஜி சரவணன் தலைமையில் சுமார் 6 தனிப்படைகள் தேடி இச்சடி அருகே கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தனர்.

incident pudukottai

கைதியை தப்பவிட்டதாக 2 போலீசாரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தனர். இந்த நிலையில் சிறுமியை வன்கொலை செய்த ராஜா மீது அதிகபட்ச தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல தரப்பிலும் கோரிக்கை எழுந்தது. இந்தநிலையில் ராஜா மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க, மாவட்ட ஆட்சியர் கோப்பில் கையெழுத்திட்ட நிலையில், நாளை காலை புதுக்கோட்டை சிறையில் இருந்துதிருச்சி மத்திய சிறைக்கு ராஜாவை மாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

incident Pudukottai
இதையும் படியுங்கள்
Subscribe