incident in pudukottai

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோயில் தாலுகா, ஏம்பல் கிராமத்தில் கடந்த 16 நாட்களுக்கு முன்பு 7 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கண்மாய் கரையோர புதரில் வீசப்பட்டிருந்தார். சம்பவ இடத்திற்கு சென்ற அப்போதைய எஸ்பி அருண்சக்தி குமார் கொலையாளியை பிடிக்க உத்தரவிட்ட நிலையில் சில மணி நேரங்களில் அதே பகுதியைச் சேர்ந்த சாமிவேல் என்கிற ராஜா (27) என்ற இளைஞன் கைது செய்யப்பட்டான்.

Advertisment

incident in pudukottai

இந்த நிலையில்தான் கைது செய்யப்பட்டு புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜாவுக்கு புதன்கிழமை மருத்துவப் பரிசோதனைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு 2 போலீசார் அழைத்து செல்லப்பட்ட நிலையில்,இன்று காலை போலீசாரிடம் இருந்து கைதி ராஜாதப்பி ஓடிவிட்டதாக தகவல் வெளியானது. தகவல் அறிந்து அங்கு வந்த மாவட்ட எஸ்.பி. பாலாஜி சரவணன் 6 தனிப்படைகள் அமைத்து அருகில் உள்ள கரையப்பட்டி, தென்னதிராயன்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களிலும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

Advertisment

இந்நிலையில் புதுக்கோட்டையில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகி தப்பி ஓடிய ராஜா பிடிபட்டார். முள்ளூர்காட்டுப்பகுதியில் ராஜா பிடிபட்டதாக காவல்துறை தற்போது தெரிவித்துள்ளது.