Advertisment

கழிவறை செல்வதாக போக்கு காட்டி கைதி தப்பியோட்டம்... காவலர்கள் இருவர் சஸ்பெண்ட்!!

pudukottai

Advertisment

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோயில் தாலுகா, ஏம்பல் கிராமத்தில் 15 நாட்ளுக்கு முன்பு 7 வயது சிறுமி, அதே பகுதியைச் ஏ.சாமிவேல் (எ) ராஜா என்பவரால் கொடூரமாக கொல்லப்பட்டார். இந்த கொடூரக் கொலைக்கு நீதி கேட்டு அரசியல் கட்சிகள், உறவினர்கள், மனித உரிமை அமைப்புகள் போராட்டங்களை நடத்தினார்கள்.

இந்த சம்பவத்தில் ராஜா என்ற இளைஞர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், புதுக்கோட்டை சிறையில் இருந்து மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அறைக்கு அழைத்து செல்லப்பட்டிருந்த ராஜா, கழிவறைக்கு செல்வதாக போக்கு காட்டிகாவலர்களை ஏமாற்றி அங்கிருந்து தப்பியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த சம்பவத்தில் காவலர் முருகையன், கோகுலகுமார்ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

தப்பி ஓடிய ராஜாவை பிடிக்க 6 தனிப்படைகள் அமைத்து, அருகில் உள்ள காட்டுப்பகுதியில் போலீசார் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

suspended police Sexual Abuse pudukkottai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe