Advertisment

நண்பனின் தந்தைக்கு வாக்கு சேகரிக்கச் சென்ற மாணவர் விபத்தில் பலி!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியத்தில் உள்ள ஆமஞ்சி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்காக ரவிச்சந்திரன் என்பவர் போட்டியிடுகிறார். இதில் பல கிராமங்கள் சேர்த்து ஒரு ஊராட்சியாக உள்ளது. அதில் செவிடன்காடு, இடையன்காடு ஆகிய பகுதிகளில் ரவிச்சந்திரன் தனது ஆதரவாளர்களுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

Advertisment

INCIDENT IN PUDUKOTTAI

வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் தனது தந்தைக்கு உதவுவதற்காக மகன் கவின் பிரவீன் (வயது 19) பாலிடெக்னிக் கல்லூரி மாணவர். தனது நண்பர் பாலாஜி (17) ஆகிய இருவரும் ஸ்கார்பியோ காரில் அறந்தாங்கி - கட்டுமாவடி சாலையில் வடுகாடு கிராமம் அருகே வாகனம் சென்று கொண்டிருக்கும்போது , வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகத்துடன் சாலையோரத்தில் உள்ள மரத்தில் மோதியுள்ளது. இதில் வாகனம் அப்பளம் போல் நொறுங்கியுள்ளது. அதனையடுத்து வாகனத்தினுள் இருந்த பாலாஜி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் கவின்பிரவீன் பலத்தக்காயமடைந்துள்ளார். சத்தம் கேட்டு அங்கு திரண்ட மக்கள் அவர்களை மீட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்க்கு விரைந்த டிஎஸ்பி பாலமுருகன், ஆய்வாளர் ரவீந்திரன் மற்றும் தீயணைப்புத்துறையினர் ஆகியோர் பொதுமக்களின் உதவியோடு படுகாயமடைந்த பிரவீனை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பாலாஜியின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நண்பரின் தந்தைக்காக வாக்கு சேகரிக்கச் சென்ற மாணவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

accident police Pudukottai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe