Advertisment

கடன் பிரச்சனை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை 

புதுச்சேரி அருகே உள்ள ஆரோவில் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4பேர் கடன் பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவ அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisment

புதுச்சேரி அருகேயுள்ள ஆரோவில் பகுதியில் வசிப்பவர் சுந்தரமூர்த்தி. இவரது மனைவி மகேஸ்வரி ஆரோவில் பகுதியில் உள்ள ஆரோ பவுண்டேஷனில் பணிபுரிந்து வந்தார். இவர்களது மூத்த மகள் கிருத்திகா 12 ஆம் வகுப்பும், இளைய மகள் சமிக்ஷா எட்டாம் வகுப்பு படித்து வந்தனர். இந்நிலையில் விழுப்புரத்தில் உள்ள உறவினர்கள் கடந்த திங்கள்கிழமை அன்று மகேஸ்வரியிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளனர். அதன்பின்பு நேற்று தொடர்பு கொள்ள முயர்சித்தபோது சுந்தரமூர்த்தி, மகேஸ்வரி ஆகிய இருவரின் செல்போன்கள்அணைத்துவைக்கப்பட்டிருந்தது.

Advertisment

INCIDENT IN PUDUCHERRY AROVIL

இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் நேரில் வந்து பார்த்தபோது வீடு உள் பக்கம் பூட்டப்பட்டு இருந்தது. இதனையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சுந்தரமூர்த்தி , அவரது மனைவி , இரண்டு மகள்கள் ஆகியோர் தற்கொலை செய்து கொண்டது. தெரியவந்தது மேலும் இச்சம்பவம் தொடர்பாக ஆரோவில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் 4 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக ஆரோவில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் உணவில் விஷம் கலந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும், தீராத கடன் பிரச்சனையால் இந்த தற்கொலை நடந்திருப்பதாகபோலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 4பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

commit suicide family police Puducherry
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe