புதுச்சேரியில் வீட்டில் அனுமதியின்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசு வெடித்து விபத்து நிகழ்ந்துள்ளது.
புதுச்சேரி ஆரியாங்குப்பத்தில் உள்ள ஒரு வீட்டில், அனுமதியின்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசு வெடித்த விபத்தில் வீடு தரைமட்டமான நிலையில், விபத்தில் சிக்கிய நெப்போலியன் மற்றும் அவரதுமனைவி ஆகியஇருவரும் தேடப்பட்டனர்.தற்போதுஇருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். அதேபோல் இந்த விபத்தில் சிக்கிய நெப்போலியனின் மகளை தற்பொழுது தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர். இந்த விபத்துச் சம்பவம் புதுச்சேரி ஆரியங்குப்பம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.