Advertisment

குழிக்குள் மண் சரிந்து தொழிலாளி உயிரிழப்பு

incident in perudurai

ஈரோடு பெருந்துறையில் குழிக்குள் மண் சரிந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

ஈரோடு மாவட்டம் பெருந்துறை நல்லாம்பட்டி ரைஸ்மில் புதூரை சேர்ந்த21 வயது மெய்ஞானமூர்த்தி கூலித்தொழிலாளி. இவர் ராசாம்பாளையத்தில் ஒரு டையிங் மில்லில் பணியாற்றி வந்தார். மூன்று நாட்களுக்கு முன்பு மாலை மில்லில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடந்தது. குழி தோண்டி குழாய் பதிக்கும் பணி நடந்தது.

Advertisment

மெய்ஞானமூர்த்தி, ஈரோடு மாணிக்கம்பாளையம்சக்தி நகர் முனியப்பன் கோவில் வீதியைச் சேர்ந்த சதீஷ் ஆகியோர் குழிக்குள் இறங்கி பணி செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென மண் சரிந்ததில்குழிக்குள் இருந்த இருவரும் மண்ணுக்கடியில் சிக்கிக்கொண்டனர். மற்ற தொழிலாளர்கள் இருவரையும் போராடி மீட்டனர். சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில்,அங்கு சிகிச்சை பலனின்றி மெய்ஞானமூர்த்தி பரிதாபமாக இறந்தார். சதீஷ்க்கு காலில் முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது தொடர்பாக வீரப்பன்சத்திரம் போலீசார் டையிங் மில் உரிமையாளரான நாராயண வலசு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் குமார் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Erode Perundurai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe