Skip to main content

மதுபாட்டில், பிளாஸ்டிக் குப்பைகளால் நேர்ந்த அவலம்... உதவிக்கரம் நீட்டிய இளைஞர்கள்!

Published on 01/08/2020 | Edited on 01/08/2020

 

incident in peraurani

 

தண்ணீர் வரத்தற்ற நேரங்களில் ஆறு, வாய்க்கால்களில் பொதுமக்கள் குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளைக் கொட்டுகின்றனர். இதனால், தண்ணீா் வரும் நாட்களில் கழிவுகள் ஆங்காங்கே தேங்கி, தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் குளம், குட்டைகளுக்கும், பாசன வாய்க்கால்களுக்கும் தண்ணீர் செல்வதில்லை.

இந்தநிலையில்தான் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியில் உள்ள ஆற்று வாய்க்கால்களைப் பல வருடங்களுக்குப் பிறகு இளைஞர்கள் சீரமைத்தனர். ஆனால் ஆற்றில் தண்ணீரோடு அடித்துவரப்பட்ட கழிவுகள் தேங்கி குளங்களுக்கு தண்ணீர் செல்லவில்லை.பேராவூரணி, நாடியம் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கிய குப்பைகளை இளைஞர்கள் அகற்றியதால் பல வருடங்களுக்குப் பிறகு கடந்த ஆண்டு குளங்களில் தண்ணீர் தேங்கியது.

அதேபோல இந்த வருடமும் கல்லணையில் வந்த தண்ணீர் கடைமடைக்குச் செல்லும் முன்பே ஆங்காங்கே அடைத்துக் கொண்டது. அதேபோல தான் நாடியம் கிராமத்திலும் குப்பைகளால் அடைப்பு ஏற்பட்டு பெரியகுளம், மற்றும் கோட்டைக்குளத்திற்குத் தண்ணீர் செல்வது தடைபட்டது. அதனைப் பார்த்த இளைஞர்கள் தன்னார்வத்தோடு தண்ணீருக்குள் இறங்கி தேங்கி இருந்த குப்பைகளை அகற்றினர். அதன்பின், குளங்களுக்குத் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. அதில் மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் என ஒரு டன் அளவிற்கு அகற்றப்பட்டது. இவை எல்லாம் குளத்திற்கும், வயல்களுக்கும் போனால் எப்படி விவசாயம் செய்ய முடியும் என்ற கேள்வியும் எழுகிறது.

 

இதுபோல நீர்நிலைகளில் மதுபாட்டில்கள் மற்றும் குப்பைகளைப் போடாதீர்கள் என சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தண்ணிக்காக நாங்க எங்கே போவோம்'-காலி குடத்துடன் மக்கள் போராட்டம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
'Where shall we go for water'-people protest with empty jugs

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் குடிநீர் வராததால் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள கீரனூர் கிராம மக்கள் இரண்டு வருடமாகவே தண்ணீர் வரவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். 'கடந்த ஆறு மாதமாக தண்ணீர் இல்லாமல் அவதிப்படுவதாகவும் தெரிவித்தனர். ஒரு குடும்பத்திற்கு இரண்டு குடம் தண்ணீர் மட்டும் தான் கிடைக்கிறது. எங்கள் ஊரில் மின்சார வசதி இல்லை, ரோடு வசதி இல்லை இது தொடர்பாக பஞ்சாயத்தில் உள்ளவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது. தண்ணிக்காக நாங்கள் எங்கே போவோம்' என காலி  குடங்களுடன் சாலையில் நின்றபடி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

Next Story

குடிநீரில் கலந்த கழிவுநீர்; 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்ப்பு

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
sewage mixed with drinking water; More than 50 people were hospitalized

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே குடிநீர் குழாய் உடைந்து கழிவுநீர் கலந்த நிலையில் கழிவுநீர் கலந்த நீரை குடித்த 50க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் என உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த முத்தம்பட்டி, ஏத்தாப்பூர், பெத்தநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலந்துள்ளதாக தெரிகிறது. இதில் 50க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குடிநீர் குழாயில் ஏற்பட்ட திடீர் உடைப்பு காரணமாக அதில் கழிவுநீர் கலந்ததும் அந்த நீரை பயன்படுத்தியதால் பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.