Advertisment

பார்வர்டு பிளாக் கட்சியின் மாவட்ட இளைஞரணித் தலைவர் வெட்டிப் படுகொலை!

incident in pattukottai... police investigation

Advertisment

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் கடந்த சில ஆண்டுகளாகவேநடைபெறும் தொடர் கொலை சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்துடனேயே நடமாடி வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில், இன்று திங்கள்கிழமை மாலை பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே, எந்த நேரமும் பரபரப்பாக உள்ள நகரின் மையப்பகுதியில்வைத்து பார்வர்டு பிளாக் கட்சியின் தஞ்சை மாவட்ட இளைஞரணித் தலைவரான (பட்டுக்கோட்டை கண்டியன் தெரு பகுதியைச் சேர்ந்த) சிரஞ்சீவி (35) கொலைசெய்யப்பட்டிருக்கிறார்.

இன்று மாலை தனது மோட்டார் சைக்கிளில் வந்து நின்றபோது, 3 பேர் கொண்ட கும்பல்அவரை சரமாரியாக வெட்டியதில் சிரஞ்சீவி சம்பவ இடத்திலேயே பலியானார். மக்கள் நடமாட்டம் அதிகமான இடத்தில் இப்படி ஒரு படுகொலை நடந்திருப்பது பட்டுக்கோட்டை மக்களை மீண்டும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

சிரஞ்சீவி மீது ஏற்கனவே வழக்குகள் உள்ள நிலையில் அவருக்கு எதிரான கும்பல்தான் இந்த கொலையைச் செய்திருக்கும்என்று சொல்கின்றனர் அப்பகுதி மக்கள்.சி.சி.டி.வி பதிவுகளை வைத்து போலீசார் விரைவில் கொலையாளிகளைப் பிடிக்க விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும்,அதே ஊரில் பெருமாள் கோயில் பகுதியைச் சேர்ந்தவர்கள் இந்த கொலையைச் செய்திருப்பார்கள் என்றும் போலீசார்சந்தேகித்துள்ளனர்.

பட்டுக்கோட்டையில் நடக்கும், பழிக்குப் பழி தொடர் கொலைகளுக்கு எப்போதுதான் முற்றுப்புள்ளி வைக்கப்படுமோ...

Investigation murder pattukottai police
இதையும் படியுங்கள்
Subscribe