
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் இருந்து கடந்த ஜனவரி மாதம் தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வளவன்புரத்தில் ஒரு வாடகை வீட்டில் மாடியில் குடியேறினார்சாந்தி (50). இவரது கணவர் ராஜகோபால்கடந்த 1 வருடத்திற்கு முன்பு இறந்துவிட்டார். சாந்தியின் மகள் துளசி (21). துளசிக்கு 2 வயதில் சாரல் என்ற ஒரு பெண் குழந்தையும், 10 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.இவர்கள்வீட்டில் 2 நாய்களும் காவலுக்காக வளர்த்துள்ளனர்.
இந்நிலையில் இவர்களது வீடு நேற்று முன்தினம் முழுவதும் வெகுநேரமாகியும் திறக்கப்படவில்லை என்ற தகவலறிந்து,வீட்டு உரிமையாளர் சகாதேவன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீடு உள்ளே பூட்டப்பட்டிருந்தது. ஜன்னல் வழியாக டார்ச் லைட்டை அடித்துப் பார்த்த போது சாந்தி தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தது தெரியவந்தது.
இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் சுமதிக்கு தகவல் கொடுத்துள்ளார். கிராம நிர்வாக அலுவலர் சுமதியின் தகவலின்படி புகாரின் பேரில் பட்டுக்கோட்டைஇன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து பார்த்தனர். அப்போது,வாயில் நுரை தள்ளியபடியே 2 பெண் குழந்தைகளும் இறந்து கிடந்தனர், வளர்த்த 2 நாய்களும் இறந்து கிடந்தது. குழந்தைகளுக்கு நடுவில் குழந்தைகளின் தாய் துளசி இறந்து கிடந்தார். அவரது கழுத்திலும் துணி அழுத்தியிருந்தது.சாந்தி சேலையில் தூக்கிட்டுச் சடலமாக தொங்கிக் கொண்டிருந்தார்.
சடலங்களை மீட்ட போலீசார் சாந்தி, துளசி மற்றும் துளசியின் 2 பெண் குழந்தைகள் உள்பட 4 பேரின் உடலையும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கும்,2 நாய்களையும் பிரேதப் பரிசோதனைக்காக கால்நடை மருத்துவமனைக்கும்அனுப்பி வைத்தனர்.
இவர்கள் பட்டுக்கோட்டையில் குடியேறி பல மாதங்கள் ஆனாலும் வெளியில் எந்த வேலைக்கும் செல்லவில்லை. இந்த நிலையில் இவர்கள் இப்படி இறந்து கிடந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்தியுள்ளது. வெளியில் இருந்து இவர்களை சாகத் தூண்டியது யார் என்று போலீசார் விசாரணைசெய்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
