incident in pattinampakkam

பட்டினப்பாக்கத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய இறங்கிய இருவர் விஷவாயு தாக்கி இறந்துள்ளனர்.

Advertisment

சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள சீனிவாசபுரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் 57வது பிளாக்கில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக இறங்கிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தில் கழிவுநீர் தொட்டியில் முதலில் இறங்கிய சேஷன்சாய் என்பவர் முதலில் மூச்சுத்திணறி உள்ளே மயக்கமடைந்த நிலையில், அவரை காப்பாற்ற நாகராஜ் என்பவரும் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கி உள்ளார்.

Advertisment

அப்பொழுது நாகராஜுக்கும்மூச்சுத்திணறல் ஏற்பட்டு இருவரும் தொட்டிக்குள்ளேயே உயிரிழந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். சம்பவத்தை அறிந்துசம்பவ இடத்திற்குவந்த காவல்துறையினர் இருவரின் உடலையும் கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு, உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.