Advertisment

காதல் திருமணம் செய்த கணவன் மனைவி தற்கொலை! பண்ருட்டியில் பரிதாபம்!

incident in pantruti

Advertisment

கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகை எஸ்.கே.வி.நகரில் வசித்து வருபவர் சிவக்குமார் (31). இவரது மனைவி சரண்யா(24). இவர்கள் இருவரும் சில ஆண்டுகள் முன்பு காதலித்து திருமணம் செய்த கொண்டனர். இறந்து இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

சிவக்குமார் சிற்ப வேலை செய்து வருகிறார்.ஊரடங்கால் வேலை கிடைக்காததால் கீரை வியாபாரம் செய்து வந்தார். இவர் நேற்று இரவு மது குடித்து விட்டு வீட்டு வந்துள்ளார். அதனை அவரது மனைவி சரண்யா(24) கண்டித்ததால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

incident in pantruti

Advertisment

இதனைத் தொடர்ந்து மனைவி சரண்யா வீட்டிற்குள் புடவை துணியால் தூக்கு போட்டு கொண்டார். அலறல் சத்தம்கேட்டு ஓடி பார்த்த கணவன் சிவக்குமார் மனைவியை மீட்டு பண்ருட்டி மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சரண்யா இறந்த விட்டதாக கூறினர். இதனால் செய்வதறியாது திகைத்த கணவன் சிவக்குமார் பயத்தில் அவரும் சரண்யா தூக்கில் தொங்கிய அதே இடத்தில்பனியன் துணியால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவறிந்ததும் பண்ருட்டி காவல் ஆய்வாளர் அம்பேத்கார் தலைமையிலான போலீசார் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Investigation police incident Cuddalore
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe