Advertisment

மழையின் காரணமாக சுவர் இடிந்து விழுந்து சிறுமி, மூதாட்டி இறப்பு!

incident in pantruti

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். நேற்று முன்தினம் இரவு, அவரது மகள் சஞ்சனா (வயது 10) மற்றும் குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்கள். இரவு விடாது பெய்த கனமழையின் காரணமாக அவரது வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில், தூங்கிக் கொண்டிருந்த சிறுமி சஞ்சனா படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாகச் சிறுமி உயிரிழந்துள்ளார்.

Advertisment

இதேபோல், பண்ருட்டி அருகே உள்ள பெரியகாட்டுப் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி தனமயில் (வயது 55) இவர் நேற்று முன்தினம் இரவு தூங்கிக் கொண்டிருந்தபோது மழையின் காரணமாக, வீட்டுச்சுவர் இடிந்து தனமயில் மீது விழுந்தது. இதனால், மூதாட்டிசம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதேபோல் தொரப்பாடி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள ரங்கநாதன் என்பவர் வீடும் இடிந்து விழுந்துள்ளது.

Advertisment

திட்டக்குடி அருகே உள்ள இடைச்செருவாய்க்கிராமத்தில் மழையின் காரணமாக வீடு இடிந்து விழுந்ததில், அங்கு கட்டப்பட்டிருந்த ஆடுகள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தன. இப்படி, கடலூர் மாவட்டத்தில் இடிபாடுகளில் சிக்கி இறந்தவர்களையும், ஆடு, மாடுகளையும், வீடுகளையும் கணக்கெடுக்கும் பணி வருவாய்த்துறை மூலம் முடுக்கி விடப்பட்டுள்ளது. அதற்கான நிவாரணத் தொகையை, விரைவில் அரசு வழங்கும் என்று பாதிப்புக்குள்ளான மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

rain weather
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe