/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a1760_0.jpg)
கொலை செய்யப்பட்டரமேஷ்
திருப்பூரில் கணவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் மனைவியே கூலிப்படையை ஏவி கணவனை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த ஒன்றாம் தேதி சேலம் -கோவை ஆறு வழிச்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த ரமேஷ் என்பவரை காரில் வந்த கும்பல் ஒன்று அடித்துக் கொலை செய்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதேபோல் கொலை செய்யப்பட்ட ரமேஷின் செல்போனை கைப்பற்றி அவருக்கு வந்த அழைப்புகளை வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a1758.jpg)
சிக்கிய கூலிப்படை
போலீசார் விசாரணையில் கொலை செய்த கூலிப்படை நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அதேபகுதியில் பேக்கரி கடை நடத்தி வரும் இர்ஃபான் என்பவர் தான் தங்களிடம் 8 லட்சம் ரூபாய் பேரம்பேசி ரமேஷை கொலை செய்ய சொன்னதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து இரஃபானைகைது செய்து போலீசார், விசாரணை மேற்கொண்டனர். அதில் கொலை செய்யப்பட்ட ரமேஷுடைய மனைவி விஜயலட்சுமிக்கும் தனக்கும் திருமணத்தையும் மீறிய உறவு இருந்தது என இர்ஃபான் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a1759_0.jpg)
ஏவி விட்டவிஜயலட்சுமி, இர்ஃபான்
கணவனை கொலை செய்ய விஜயலட்சுமி கொடுத்த அறிவுறுத்தலின்படி இர்ஃபான் கூலிப்படையை ஏவி கொலை செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக விஜயலட்சுமியிடம் படுத்தப்பட்ட விசாரணையில் போதையில் இரவில் வீட்டுக்கு வந்த ரமேஷ் அடிக்கடி சித்திரவதை செய்ததாகவும் அடித்துக் கொடுமைப்படுத்தவும் தெரிவித்துள்ளார். இர்ஃபானின் பேக்கரிக்கு அடிக்கடி சென்று வந்த விஜயலட்சுமிக்கு முறையற்ற தொடர்பு ஏற்பட்டுள்ளது. கணவனால் தனக்கு ஏற்படும் கொடுமைகளை இர்ஃபானிடம் சொல்லி உள்ளார். அதனையடுத்து இர்ஃபான் கூலிப்படையை ஏவி விட்டு ரமேஷை கொலை செய்தது தெரியவந்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)