incident in nilagiri

நீலகிரி மாவட்டம் குந்தாபிரிஜ் மட்டகண்டியைச் சேர்ந்த ஆனந்த் என்பவருக்கும் தூனேரியைச் சேர்ந்த பிரியதர்ஷினி என்பவருக்கும் கடந்த 29 -ஆம் தேதி திருமணம் நடத்த முடிவாகிய நிலையில், மணமகன் வீட்டில் திருமணத்திற்காக தடபுடல் விருந்து ஏற்பாடாகியிருந்தது.

Advertisment

மணமகன் மணவறையில் ஆசையாய்க்காத்திருக்க, தாலிகட்டும் நேரம் நெருங்கியதால் உறவினர்கள் புடை சூழ மணமகள் அழைத்துவரப்பட்டார். மந்திரங்கள் ஓத, மணமகன் மணமகளின் கழுத்தில் தாலி கட்டப்போகும் போது திடீரென தடுத்த மணமகள் "ஒரு மணி நேரம் காத்திருங்கள். என் காதலன் பார்த்திபன் வருகிறார். என்னைக் கைப்பிடித்துக் கூட்டிப்போக" எனச் சொல்ல மண்டபமே அதிர்ந்துவிட்டது.

Advertisment

உறவினர்கள் சிலர் அறிவுரை சொல்லியும், அதெல்லாம் முடியாது என பிடிவாதமாக இருந்தார் மணமகள் பிரியா. மணமகன் என்ன செய்வது என்று தெரியாமல் தர்மசங்கடத்தில் அமர்ந்திருந்தார். அதே நேரத்தில் கோபமடைந்த மணமகளின் தாய், பிரியாவை தாக்க வர, சலசலப்பு ஏற்பட்டது. சிறிது நேர சலசலப்பிற்குப் பின் பிரியாவின் வீட்டார்அனைவரும் ஒரு வாகனத்தில் ஊட்டிக்குப்புறப்பட்டனர். 'லவ்டேல்' என்ற பகுதியில் காதலன் எனக்காகக் காத்திருப்பதாகபிரியா கூறியதை அடுத்து பெண் வீட்டாரும், 'நீ தொலைந்து போ!' என்று கூறி அங்கு இறக்கிவிட்டுப் போய்விட்டனர்.

cnc

இது குறித்து ஊர் மக்கள் கூறும்போது, "பிரியா சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது,ஏற்கனவே திருமணமான பார்த்திபன் என்பவரோடு காதல் ஏற்பட்டுள்ளது. பார்த்திபன் தனது மனைவியை விவாகரத்துச் செய்தவுடன், பிரியாவை திருமணம் செய்வதாக உறுதியளித்து இருக்கிறார். இதுபெண் வீட்டாருக்கும் தெரியவர, வேறு சமூகப்பையனைத் திருமணம் செய்ய ஒத்துக் கொள்ளமாட்டோம் எனச் சொல்லியே இந்தத் திருமணத்தை ஏற்பாடு செய்துள்ளார்கள்" என்றனர்.

Advertisment

மணமேடையிலேயேமணமகள், 'என்னை அழைத்துச் செல்ல, என் காதலர் வருவார்' என உறவினர்களிடம்கூறிய அந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில்வைரலாகி வருகிறது.