incident in nellai seramadevi

நெல்லை மாவட்டத்தின் சேரன்மகாதேவி சந்தன மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாலை. இவர் மனைவி மாரியம்மாள் இவர்களுக்கு 2 மகன்கள் ஒரு மகள். இரண்டு மகன்களும் விபத்து மற்றும் நோயில் இறந்து விட்டனர்.

Advertisment

இந்த நிலையில் கடந்த 24ம் தேதியன்று இரவு மாரியம்மாள் அவரது கணவரின் சகோதரரான மாரியப்பன் அவரின் மனைவி மாரியம்மாள் ஆகியோர் வீட்டில் இருந்திருக்கின்றனர். அது சமயம் அதே தெருவைச் சேர்ந்த கணேசன் (38) என்பவர் அவரது உறவினர்கள். 8 பேருடன் ஆயுதங்களுடன் திடீரென்று உள்ளே நுழைந்தவர்கள் மாரியப்பன் மனைவி மாரியம்மாளை அரிவாளால் வெட்டினர் இதனைத் தடுக்க முயன்ற மாலை மனைவி மாரியம்மாளுக்கும் வெட்டு விழுந்தது. இதில் படுகாயமடைந்த மாலை மனைவி மாரியம்மாள் சம்பவ இடத்திலேயே பலியானார்.

சம்பவ இடம் வந்த சேரன்மாதேவி இன்ஸ்பெக்டர் சுபாஷ் ராஜன் உள்ளிட்ட போலீசார் மாரியம்மாளின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தவர்கள் காயமடைந்த மாரியம்மாளை சிகிச்சைக்காக சேரன்மகாதேவி அரசு மருத்துவமனை சேர்த்தனர்.

Advertisment

படுகொலை குறித்து விசாரணை நடத்திய போலீசார் கணேசன் உள்ளிட்டவர்கள் மது போதையில் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறின் போது அடித்துக் கொண்டார்கள். அவர்களை மாரியப்பன் மனைவி மாரியம்மாள் விலக்கி தடுத்திருக்கிறார். அந்த ஆத்திரம் காரணமாக மாரியப்பன் மனைவி மாரியம்மாளை பழி வாங்க வெட்டிய போது மாலை மனைவி மாரியம்மாள் தடுக்க முயன்றதால் அரிவாள் வெட்டு அவருக்கு விழ அவர் பலியானார் என போலீஸ் தரப்பில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக கணேசன் ஆறுமுகம் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் மாரியம்மாள் கொலையில் தொடர்புடைய A-7 குற்றவாளியின் தந்தையான முத்துப்பாண்டியன் இன்று மாலை 4 மணியளவில் பால் பண்ணைக்கு பால் ஊற்றச் சென்றிருக்கிறார். அது சமயம் திடீரென்று வந்த மர்மநபர்கள் முத்துப்பாண்டியனை வழி மறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் தலை தொங்கியது. சம்பவ இடத்திலேயே முத்துப்பாண்டியன் பலியானார்.

தகவலறிந்து சம்பவ இடம் வந்த மாவட்ட எஸ்.பி.யான சரவணன் உள்ளிட்ட போலீஸ் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த 24ம் தேதி நடந்த கொலைக்கு பழிக்குப் பழியாக இந்தச் சம்பவம் நடந்திருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. சம்பவம் தொடர்பாக மூன்று பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பதற்றத்தில் இருக்கும் சேரன்மகாதேவி பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தி இருக்கிறார் எஸ்.பி.சரவணன்.