நெல்லை மாவட்டத்தின் கூடன்குளம் அருகேயுள்ள செட்டிகுளம் புதுமனையின் இந்திரா காலனியைச் சேர்ந்த சகோதரர்கள் கதிரவன் சிவன்மணி.இருவரும் அங்குள்ள கோவிலின் முன்பாக பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியில் பைக்கில் இருவர் வேகமாகச் சென்றதைச் சகோதரர்கள் தட்டிக்கேட்டதால் அவர்களுக்குள் வாய்த்தகாராறு ஏற்பட்டு அடித்துக்கொண்டார்கள். உடனே அப்பகுதியினர் தலையிட்டு அவர்களைச் சமாதானப்படுத்தி அனுப்பினர்.

Advertisment

பின்னர் பைக்கில் சென்றவர்கள் தங்களின் உறவினர்களிடம் விவகாரத்தைத் தெரியப்படுத்தி அவர்களை இந்திரா காலனிக்கு வரவழைத்தனர். அந்தக் கும்பல் காலனியிலுள்ள வீடுகளைக் கற்கள் கொண்டு தாக்கியதால் 10 வீடுகள் தேசமடைந்தன. அங்கு நின்றிருந்த 8 பைக்குகளையும் அடித்து நொறுக்கியவர்கள் சகோதரர்களான சிவன்மணி, கதிரவனையும் கடுமையாகத் தாக்கிவிட்டுத்த் தப்பியோடினர்.

Advertisment

இதையடுத்து சகோதரர்கள் சிகிச்சைக்காக கூடன்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படனர். இதனால் இரண்டு தரப்பிற்குமிடைய பதற்றச்சூழல் ஏற்பட்ட நேரத்தில், தாக்கியதுடன் வீடுகளை சேதப்படுத்திய கும்பல் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இந்திரா காலனி மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்பாட்டுக்கு வந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சமாதானப்படுத்தியதால் அவர்கள் கலைந்து சென்றனர். அங்கு பதற்றத்தைத் தணிக்க போலீசார் குவிக்கப்பட்டனர்.

இதுகுறித்து கூடன்குளம் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஜெகதா, 22 பேர் மீது வழக்குப் பதிவு செய்தார். மேலும்,புதுமனைப் பகுதியைச் சேர்ந்த சிவராமன், சஞ்சய், பாலகிருஷ்ணன், ஹரிகிருஷ்ணன் உள்பட 4 பேரைக் கைது செய்தனர். அதனைக் கண்டித்து அவர்களின் உறவினர்கள் பொது மக்கள் நேற்று மாலை கூடங்குளம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். விசாரணையில் தகராறில் ஈடுபட்டிருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததையடுத்து முற்றுகை விலக்கப்பட்டது.

Advertisment

சம்பவ இடத்தைப் பார்வையிட்ட எஸ்.பி மணிவண்ணன் மோதலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்ய உத்தரவிட்டார். இருதரப்பினரின் பதற்றத்தைத் தனிக்க வள்ளியூர் ஏ.எஸ்.பி. சமைசிங் மீனா தலைமையில் போலீஸ் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இந்த சம்பவத்தால் சற்று பரபரப்பானது அந்தப்பகுதி.