Skip to main content

நீடாமங்கலத்தில் ஆம்புலன்ஸ் போக சாலை வசதியில்லாமல் பெண் பலி!

Published on 20/10/2019 | Edited on 20/10/2019

 

திருவாரூர் அருகே உள்ள நீடாமங்கலத்தை செர்ந்த மாலா என்கிற பெண்ணை பாம்பு கடித்து மருத்துவனைக்கு அழைத்துச்செல்ல ஆம்புலன்ஸ் வரமுடியாதபடி சாலை முழுவதும் உழவு வயல்போல் இருந்ததால் பரிதாபமாக இறந்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தைச்சேர்ந்தவர் மாலா, வீட்டின் அருகே விவசாய வேலை பார்த்துக்கொண்டிருந்தவரை பாம்பு கடித்துள்ளது. சிறிது நேரத்தில் மயக்கமடைந்து கீழேவிழுந்த மாலாவை அக்கம்பக்கத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கூறினர். அந்த பகுதியை நோக்கி விரைந்து வந்த ஆம்புலன்ஸ் மூன்று கிலோ மீட்டருக்கு மூன்னாடியே சாலை மோசமாக இருந்ததால் வரமுடியாமல் திணறி நின்றுவிட்டனர். நீடாமங்கலத்தில் இருந்து வரதராஜபெருமாள்கட்டளை வரையிலும் மாலாவின் உறவினர்கள் மாற்றி மாற்றி தூக்கிவந்து ஆம்புலன்ஸ்ல் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மாலாவை பரிசோதித்த மருத்துவரோ, மாலா ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறி கைவிரித்துள்ளார். ஆத்திரமான பொதுமக்களும், மாலாவின் உறவினர்களும் இந்த இறப்பிற்கு காரணம் மோசமான சாலைதான் என கூறி கலங்குகின்றனர்.

இதுகுறித்து நீடாமங்கலத்தைச் சேரந்த சண்முகம் என்பவர் கூறுகையில், "பத்து மாதங்களுக்கு முன்னாடி சாலை போடுவதாக தோண்டிப் போட்டதோட போயிட்டாங்க, அதுநாளில் இருந்து சைக்கிளில், டூவிலரில் காரில்கூட போகமுடியாமல் பொதுமக்கள் தவிக்கின்றனர். தற்போது மழையால் தோண்டபட்ட சாலை முழுவதும் உழவு வயலைப்போல மாறிவிட்டது. சாலை சரியாக இருந்திருந்தால் ஆம்புலன்ஸ் ஊருக்கு வந்திருக்கும். மாலாவை காப்பாற்றியிருக்கலாம். மோசமான சாலையால் ஒரு உயிரே போயிடுச்சி" என்கிறார் கோபமானவராக.

சாலை வசதியில்லாமல் ஒரு உயிர் போயிருப்பதை கண்டு பொதுமக்கள் கலங்குகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

மலைக்கிராம மக்களுக்கு இலவச ஆம்புலன்ஸ்; நடிகர் பாலாவின் நெகிழ்ச்சி செயல்

Published on 17/08/2023 | Edited on 17/08/2023

 

Actor Bala gave a free ambulance to the people of the hill village

 

ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் கடம்பூர், குன்றி மலைவாழ் மக்களின் மருத்துவ தேவைகளுக்காக நகைச்சுவை நடிகர் பாலா, அவரது சொந்த நிதியில் வழங்கிய ஆம்புலன்சு வாகனத்தின் சேவை துவக்க விழா நேற்று நடைபெற்றது. இதில், காங்கிரஸ் கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ராஜன் தலைமை தாங்கினார். ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம், ஆணையாளர் ஜானகி ரவீந்திரன், மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் டாக்டர் அம்பிகா சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், சிறப்பு அழைப்பாளராக ஈரோடு எஸ்பி ஜவகர் கலந்து கொண்டு, இலவச ஆம்புலன்ஸ் சேவையை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.

 

இதைத்தொடர்ந்து நடிகர் பாலா பேசுகையில் கூறியதாவது: “கடம்பூர் மற்றும் குன்றியை சுற்றியுள்ள 12 கிராமத்தில் 8 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். இதில், இந்த மலைக்கிராமத்தை சுற்றி வசிக்கும் மக்களுக்கு பாம்பு, வன விலங்களால் பாதிப்பு ஏற்பட்டாலோ, உடல் நலன் பாதிப்பு ஏற்பட்டாலோ 16 கி.மீட்டர் தொலைவில் இருந்து தான் ஆம்புலன்சு வாகனம் வர வேண்டும். இதையறிந்ததும், இவர்களுக்கு ஆம்புலன்சு வாகனம் வாங்கி தர வேண்டும் என எண்ணினேன். இதற்காக யாரிடமும் நான் பணம் வாங்காமல், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அந்த பணத்தை சேர்த்து இந்த ஆம்புலன்சு வாகனத்தை வாங்கி கொடுத்தேன். இது எனது 2 ஆவது ஆம்புலன்சு வாகனம் ஆகும். நான் இதேபோல் ஆம்புலன்சு வசதியின்றி இருக்கும் குக்கிராமங்கள் மற்றும் மலைக்கிராம மக்களுக்கு 10 ஆம்புலன்சு வாகனம் எனது சொந்த நிதியில் வாங்கி தர முடிவு செய்துள்ளேன்” இவ்வாறு பாலா கூறினார்.

 

 

Next Story

பட்டப் பகலில் நடுரோட்டில் ரவுடி படுகொலை; பழைய பகையை தீர்த்த கும்பல்

Published on 11/03/2023 | Edited on 11/03/2023

 

thiruvaruthiruvarur needamangalam  poovanur rajkumar incident r needamangalam  poovanur rajkumar incident 

 

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அடுத்துள்ள பூவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார். வளரும் தமிழகம் கட்சியின் மண்டல இளைஞரணி செயலாளராக இருந்து வருகிறார். பூவனூர் ராஜ்குமார் மீது தமிழகம் முழுவதும் இருபதுக்கும் மேற்பட்ட கொலை மற்றும் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் நடேச தமிழார்வனை கொலை செய்த வழக்கில் ராஜ்குமார் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.  அந்த வழக்கில் சிறையில் இருந்து விட்டு நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு தனது ஆதரவாளர்கள் நான்கு பேருடன் வந்துள்ளார்.

 

வழக்கு விசாரணை முடிந்து, தனது வழக்கறிஞரை கமலாபுரத்தில் விடுவதற்காக காரில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த ஸ்கார்பியோ கார் அதிவேகமாக வந்து ராஜ்குமாரின் காரின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி, டோர் லாக் ஆனதும் மற்றவர்கள் இறங்க முடியாமல் போக, ராஜ்குமார் மட்டும் தப்பிக்க ஓடும் போது, ஸ்கார்பியோ காரிலிருந்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த 8 பேர் கொண்ட கும்பல் ராஜ்குமாரின் தலை கால்  உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் மூன்று தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளைத் தேடும் பணியினைத் தீவிரப்படுத்தினார்.

 

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒளிமதி கிராமத்தைச் சேர்ந்த நடேச தமிழார்வனின் மகன் ஸ்டாலின் பாரதி, வீரபாண்டியன், சூர்யா, அரசு, மாதவன் ஆகிய ஐந்து நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் ஆய்வாளர்கள் ஜெகதீஸ்வரன் ராஜேஷ் இளங்கோ ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு மீதமுள்ள குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். விசாரணையில் இருக்கும் போலீசாரோ, "கடந்த 11.10.2021 அன்று நீடாமங்கலம் கடை தெருவில் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட நீடாமங்கலம் சிபிஐ ஒன்றிய செயலாளர் நடேச தமிழார்வனின் படுகொலைக்கு பழி தீர்க்கும் விதமாக இந்த படுகொலை நடந்துள்ளதாகத் தெரிய வருகிறது." என்கிறார்கள். இதற்கிடையில் ராஜ்குமாரின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்களும் அவரது கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.