3 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை... நெடுவாசல் வாலிபர் கைது!

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள நெடுவாசல் கிழக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன் மகன் பாலமுருகன் (வயது 32). 10 ஆண்டுகளுக்கு மேல் வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு சில ஆண்டுகளுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்து திருமணம் செய்து மனைவி மற்றும் ஒரு கைக்குழந்தையுடன் வசித்து வருகிறார்.

நேற்று உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த போது மாலை நேரத்தில் பாலமுருகன் அவரது வீட்டிற்கு அருகில் நின்ற பக்கத்து வீட்டு 3 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதை அந்தக் குழந்தையின் சகோதரி பார்த்துவிட்டு அக்கம் பக்கத்தினரிடம் சொல்லிவிட்டார்.

INCIDENT IN NEDUVASAL... POLICE ARREST

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற வடகாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பரத் சீனிவாசன் மற்றும் போலீசார் பாலமுருனை கைது செய்து விசாரணைசெய்து ஆலங்குடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். சம்பவம் குறித்து குழந்தையின் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் பாலமுருகனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து விசாரணைசெய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

arrest Child abuse neduvasal police Pudukottai
இதையும் படியுங்கள்
Subscribe